பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 155

பொருளைக் கவர விரும்பமாட்டார்கள். தமது நன் முயற்சி யால் வந்த நல்ல பொருள்களின் அளவிற் கேற்ப, உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய தேவையுடன் மனநிறைவு (திருப்தி) கொள்வர்.

எனவே, ஐம்புல அவாவை அடக்க முடியாதவரே, தீய வழிகளிலாயினும் பொருளீட்டி இன்பங்களை நுகர்வர் என்பது புலனாகும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.” :சிற்றின்பம் வெ.கி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.” :இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.” ஒருவர் பல நூற்களைக் கற்பதால் வரும் நுட்பமான கல்வியறிவும் வாழ்க்கையில் கண்ட அநுபவ அறிவும் நிரம்பப் பெற்றிருப்பினும், பிறர் பொருளைக் கவர விரும்பி, அறிவற்ற முறையில் (அறிவில்லாதவர் போல்) நடந்து கொண்டால், அவருடைய அறிவினால் ஒரு பயனும் இல்லை; அவர் அறிவுடையவராகவே கருதப்படமாட்டார்.

‘அ.கி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெ.கி வெறிய செயின்.” அறிவை, அ.கி.-அகன்ற அறிவு என்றார் ஆசிரியர். அஃகுதல் என்றால் நுணுக்கமாயிருத்தல் - கூரியதாதல். ‘அவன் கூரிய - நுட்பமான அறிவு உடையவன்’ என்று உலக வழக்கில் சொல்வதைக் கேட்கின்றோமல்லவா? பிறர்