பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 157

வற்புறுத்துவதற்காகவே ‘யார்மாட்டும் வெஃகி’ என்றார் ஆசிரியர்.

தன்னுயிரைப் போலவே மற்றைய பிற உயிர்களை யெல்லாம் கருதிப் பாதுகாக்கும் பண்பிற்கே அருளுடைமை என்று பெயராம். அந்த அருளுடன் வாழவேண்டும் என்னும் உறுதியுடன் வாழ்க்கையைத் தொடங்கியவன், இடையிலே அந்த அருளை விட்டு, பிறர் பொருளைக் கவரச் சூழ்ச்சி செய்வானேயானால், வந்த வேலையை மறந்து பந்தல் காலைப் பிடித்து நின்று வேடிக்கை பார்ப்பவன் போல - குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்பவன் போலப் பயனின்றி வீணில்தானே கெட்டு விடுவான்.

‘அருள்வெ.கி ஆற்றின்கண் நின்றான்

பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.’

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.”

ஒருவன் தன்பொருள் குறையாமல் பெருக வேண்டு மானால், தான் பிறர்பொருளை விரும்பாதிருக்க வேண்டும். பிறர் பொருளை விரும்பினால் தன் பொருள் குறையும். ஆனால், பிறர் பொருளையும் கவர்ந்து சேர்த்துக் கொண்டால்தானே தன் பொருள் பெருகும்? என்று ஈண்டு கேட்கலாம் போல் தோன்றலாம்! அது சரியன்று. ஒருவன் முதலில் தன்னிடம் நூறு பொற்காசுகள் வைத்திருந்தான். பின் அதனோடு, பிறரிடம் ஐம்பது காசுகளைக் கவர்ந்து, தன் தொகையை நூற்றைம்பது காசுகளாகப் பெருக்கிக்