பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வள்ளுவர் இல்லம்

கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். இது பிறரால் அறியப்பட்டு நீதி மன்றம் வரைக்கும் சென்றது. அங்கே ஒருவர் (நீதிபதி) இவன் கவர்ந்த ஐம்பது காசுகளை மீட்டு உரியவனிடம் சேர்த்து விடுகின்றார்; மேற்கொண்டு இவனுக்கு ஐம்பது காசுகள் தண்டமும் விதித்து விடுகிறார். அப்போது இவன் அத்தண்டத்தைச் செலுத்தித் தன் நூறு காசுகளை ஐம்பது காசுகளாகக் குறைத்துக் கொள்வானல்லவா? இவன் பிறர் பொருளைக் கவராதிருந் தால் இவனுடைய செல்வம் குறையாதல்லவா? அதனைக் கொண்டு நன் முறையில் முயற்சி செய்திருந்தால், மேலும் அது பெருகியிருக்குமே!

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.” பிறர் பொருளை விரும்பாதவரை, அவரது நற் பண்பின் காரணமாகச் செல்வம் சென்றடையும்.

பிறர் பொருளை விரும்பியவர் அழிவர்; விரும்பாதவர் செயலில் வெற்றிபெற்றுச் சிறப்புறுவர். பிறர் பொருளை விரும்பி எதிர்பார்ப்பவர், கிடைக்கும் என்று அதனையே நம்பிக்கொண்டிருப்பாராதலானும், சோம்பலால் வேறு தொழில் செய்யமாட்டா ராதலானும் வருவாயின்றி அழிந்து போவார். பிறர் பொருளைக் கவர்ந்தாலும், அது பிறரால் கண்டுபிடிக்கப்பட்டுவிடு மாதலானும், தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் பின் ஒரு சமயமாவது கண்டு பிடிக்கப்பட்டுவிடுமாதலானும் அவர் அழிந்தொழிவது திண்ணம். பிறர் பொருளை வேண்டாதவரோ, தம் சொந்த