பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புறங் கூறாமை

இல்வாழ்வார் அறத்தைப் பின்பற்றாவிடினும், பிறரைப் பற்றிப் புறங்கூறாமலாவது வாழவேண்டும். ஒருவன் பிறரைப் பற்றிப் புறங்கூறும் போது, பொய்யாகச் சில வற்றைப் புனைந்து கூறலாம். புறங்கூறப்படுபவன் எதிரே வந்துவிட்டபோது, அதனை ஒத்துக்கொள்ளாமல் மறுக்கவும் செய்யலாம். அப்போதுதானே யார் கூறுவது உண்மை என்பது புலப்படும்? எனவே, பிறறொருவரைப் பற்றி அவரது முன்னே பேசலாமே தவிர அவரது பின்னே இகழ்ந்து பேசுதல் பேடித்தனமாம். பிறர் அறியாமல் பின்னே பேசுவதால், அவர் எவ்வாறு தம் குற்றத்தை யுணர்ந்து திருந்த முடியும் அதனால் முன்னே பேசுவதுதான் வீரமும் நன்மை பயப்பதுமாகு மல்லவா? .

‘அறங்கூறான் அல்ல செயினு மொருவன்

புறங்கூறா னென்ற லினிது.” “கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல்.” பிறரொருவரைப் பின்னால் இகழ்ந்து பேசிவிட்டு, அவர் முன்னே பொய்யாகப் புகழ்ந்து பேசிப் பொய்ச் சிரிப்புச் சிரிப்பது, ஏனைய தீமைகளினும் கொடியது. ‘அறனழீஇ யல்லவை செய்தலிற் lதே

புறனழி இப் பொய்த்து நகை.'