பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வள்ளுவர் இல்லம்

சாதல் நன்று. நல்லவை செய்வார்க்கு இன்பமும் புகழும், அல்லவை செய்வார்க்குத் துன்பமும் இகழும் உண்டாகும் என்று நீதி நூல் கூறுகின்றது. எனவே, அதன்படிப் பிறரைப் புறங் கூறிப் பொய்த்து வாழ்பவன், அப் பிறரால் துன்பமும் உலகினரால் இகழும் பெறுவான் என்பதும், புறங்கூறிப் பொய்க்காது இறப்பவன், அத்துன்பத்திற்கும் இகழிற்கும் ஆளாகாமல், இருக்கும் வரை இன்பத்தோடும், இறந்தபின் இருக்கும் புகழோடும் போய்ச்சேருவான் என்பதும் புலனாகும். மேலும், அவன் இறந்து போவதால், உலகினர்க்கும் அவனால் உண்டாக விருந்த தீமைகள் நீங்கி, என்றும் உள்ள நன்மை நிலைக்கு மன்றோ? “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்

அறங்கூறும் ஆக்கங் தரும்.’

நயவஞ்சகன் ஒருவன் பொதுமக்களை நோக்கி, ‘மக்களே! நீங்கள் அவற்றைச் செய்வது பாவம்; இவற்றைச் செய்வதே நல்ல அறம்; ஆதலின் அறத்தையே கடைப்பிடியுங்கள்!” என்று அறவுரை வழங்கிவிட்டு, தான் பிறரைப் பற்றி அவரில்லாத விடங்களிலே இழித்துப் பேசினால், அதுமட்டும் அறமாகுமா? எனவே, அவன் பிறர்க்கு அறம் உரைத்தாலும், அவன் மனம் அறத்தை விரும்பவில்லை என்ற உண்மையைப் பொதுமக்கட்கு அறிவிக்கும் சான்று, அவனது புறஞ் சொல்லும் புன்மைக் குணமாம். அக்குணத்தைக் கொண்டு அவனது உண்மை யுருவத்தை மக்கள் புரிந்து கொள்வார்.

“அறஞ்சொல்லு நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப்படும்.'