பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 163

சொல்லுதல் வாயினுடைய வேலையல்லவா? நெஞ்சத்தின் வேலை நினைப்பதல்லவா? உண்மையிங்ஙன மிருக்க, வள்ளுவர், அறம் சொல்லும் வாயான் என்னாது, அறம் சொல்லும் நெஞ்சத்தான் என்று கூறியிருப்பதி லுள்ள நயத்தை ஊன்றி நோக்க வேண்டும். அஃதாவது, அறத்தைப் பின்பற்ற உள்ளே மனம் விரும்பாமல், பிறரை ஏமாற்ற வெளியில் மட்டும் வாயால் அறத்தை யுரைப்பது மிக எளிது; அதனால் பயனில்லை. அறத்தை வாய் சொல்லா விட்டாலும், கடைப்பிடிக்க மனம் விரும்புவதே சிறந்ததும் இன்றியமையாததுமாகும் - என்னும் நயம் உள்ளடங்கிக் கிடப்பதை யுணர்க!

புறங்கூறல் என்னும் ஒரே ஒரு தீயசெயல் அவனிடம் இருப்பதைக் கொண்டே, அவனை அறமில்லாதவன் என்று கூறுவது பொருந்துமா? என்று வினவலாம்! அவன் இத்தீய செயலைச் செய்வதற்குக் காரணம், அவனது மனத்தின் புன்மை (இழிதன்மை) தானே? அப்புன்மை இதைச் செய்யத் தூண்டுவதுபோல், வழக்கமாக மற்றைய தீய செயல்களையும் செய்யத் தூண்டுமல்லவா? அதனால், அவன் அறமுடையவன் அல்லன் எனத் தெளிக!

ஒருவன் பிறரைப் பழித்துப் பேசிக்கொண்டிருந்தால், அவனைப் பற்றியும் பிறர் பழித்துப் பேசுவார்கள். குற்றம் செய்யாதவர் ஒருவரும் உலகில் இருக்க முடியாது. தப்பித் தவறி ஏதேனும் ஒரு குற்றமாயினும் செய்யத்தான் நேரிடும். அப்படியிருக்க, ஒருவன் பிறரது குற்றத்தைச் சுட்டிப் பழித்துப் பேசினால், அவரோ அல்லது வேறு யாரோ இயற்கையாக இவனுக்குள்ள குற்றத்தையும் சுட்டிப்