பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வள்ளுவர் இல்லம்

பழித்துப் பேசுவார்கள். அதனை இவன் உணர வேண்டும். உணர்ந்து புறங்கூறலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

‘பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுங்

திறன்தெரிந்து கூறப் படும்’.

தன்னிடம் வந்து பிறரைப் பற்றிப் பழிப்பவன் இது போலவே தன்னைப் பற்றியும் பிறரிடம் பழிப்பான் என்பதைக் கேட்பவன் தெரிந்து கொள்ள வேண்டும் - என்பதும் இக்குறளிலிருந்து புலனாகலாம். வேலன் என்பவன் கொற்றன் என்பவனைப்பற்றி முருகனிடம் பழிக்கிறான். முருகன் என்பவன் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். கேட்கும் முருகன், தன்னைப் பற்றியும் வேலன் பிறரிடம் பழிக்கக்கூடும் என்பதையுணர வேண்டும். அப்படியுணரத் தொடங்கி விட்டால், பிறன் பழி கூறுபவனை யாரும் நம்பமாட்டார்கள். அவனைக் கண்டதுமே விரட்டுவார்கள் என்பது பெறப்படும்.

ஒருவன் தன் நண்பரைப் பற்றி, அவர் இல்லாத விடத்தில் பிறரிடம் இனிமையாக - நல்லவிதமாகப் பேசினானேயானால், அதைக் கேட்டவர், பின்னொரு சமயம் இவனுடைய நண்பரைக் கண்டபோது ‘உம் நண்பர் உம்மைப்பற்றி எம்மிடம் மிக நல்லவிதமாகச் சொன்னார்’ என்று சொல்லுவார். அதைக்கேட்ட இவனுடைய நண்பர் இவனது உண்மையான அன்பையும் நட்பையும் நன்றாக நம்பி மேலும் இவன் மேல் மிக்க அன்பும் நண்பும் கொள்வார். இங்ஙனமின்றி இவன் தன் நண்பரைப் பற்றிப் பிறரிடம் இழிவாகக் கூறிவிட்டால், கேட்டவர் பின்னொரு சமயம் அந்நண்பரிடத்தில் “உம்