பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இல்வாழ்க்கை

மிகப் பழங்காலத்தில் விலங்குகள் போல் வாழ்ந்து வந்த மக்கள் - ஏன் - விலங்குகளினின்றும் தோன்றியவர் களாகச் சொல்லப்படும் மக்கள், இப்பொழுதுள்ள திருந்திய குடும்ப வாழ்க்கை முறையினை அமைத்துக்கொண்டிருப்பதே ஒருவகை விஞ்ஞான அருஞ்செயல்தான்! நடந்தே வழி கடந்து வருந்திய மனிதன், பலவகையான வண்டிகளிலும் கப்பல்களிலும், வானவூர்திகளிலும் வசதியாகப் பயணம் செய்வது எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ - அத்தகையதே, அன்று கண்டபடி அலைந்து திரிந்து அல்லலுற்ற மனிதன் இன்று மனைவியுடன் இல்லில் அமர்ந்து வாழும் இல்வாழ்க்கை நெறியும்!

அரசுத் தலைவர்களாக அமரும் சிலர் குடிமக்களுக்கு நன்மை தரும் ஆக்க வேலைகள் புரியாதது மட்டுமல்லஅழிவு வேலைகளும் செய்துவிட்டுத் தப்பித்துக்கொண்டு தம் பதவிக் காலத்தைக் களிப்புடன் கழிக்கக்கூடிய இவ்வுலகில், அரசுத் தலைவரின் கடமைகளினும் மிகப் பல அரும்பெருங் கடமைகளைத் திருவள்ளுவர் இல்லறத் தானுக்கு ஏற்றிக் கூறியிருப்பது மிகவும் நயத்தற்கும் வியத்தற்கும் உரியதாகும்.

ஆம்; இல்லறந்தான் பலரைக் காக்கவேண்டும்இல்லையில்லை - எல்லோரையுமே போற்றிக் காக்க