பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 169

னிடத்தில், மருந்துக்கும் நயமான - இனிமையான பேச்சு இருக்கமுடியாது

பயனில பல்லார்முன் சொல்லல் நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது.’ “நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல

பாரித்து உரைக்கும் உரை’.

பயனற்ற சொல், கேட்பவருக்கு நயம் தராததோடு, சொல்பவனுக்கும் தீமையையன்றி நன்மையளிக்காது.

அதாவது, ஒருவன் பிறரைப் புண்படுத்தக் கூடிய வம்புப் பேச்சுக்களைப் பேசினால், கேட்பவருக்கும் இனிமை யிருக்காது; அதனோடு அவர் திரும்ப இவனுக்குத் தீமை விளைப்பாராதலால் சொல்பவனுக்கும் தீமையேயன்றி நன்மையில்லை.

இயற்கையில் நல்லவரும், இடையில் பயனிலாத சொற்களைச் சொல்லத் தொடங்கி விடுவாராயின், அவருக்குள்ள சீரும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும்.

‘நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து’. “சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்’.

பயனில் சொல் பேசுபவன் மனிதப்பதர் ஆவான். மேல் தோலுக்குள்ளே உள்ளீடு (அரிசி) உள்ள (நெல்) மணியைத்தான் ‘நெல்’ என்று கூறுகின்றோம். உள்ளீடு (அரிசி) இல்லாததைப் பதர்” என்று அழைக்கிறோம். மற்றைய கூலங்கட்கும் (தானியம்)