பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வள்ளுவர் இல்லம்

வேண்டும். அதாவது தன் குடும்பத்தையும் பேண வேண்டும். குடும்பம் என்றால், பெற்றோர், மனைவி, மக்கள் முதலியோரது தொகுப்பன்றோ! குடும்பத்தினரோடு உற்றார் உறவின் முறையார்க்கும் உதவ வேண்டும். வரும் விருந்தினரையும் ஓம்பவேண்டும். அம்மட்டுமா? துறவிகள், பற்றுக்கோடு (ஆதரவு) அற்றவர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோரையும் போற்றிக் காக்கவேண்டும். இம்மட்டுமா? ஆதரவின்றி இறந்துபோனவர்களை அடக்கம் செய்ய வேண்டும். இறந்துபோன முன்னோர்கட்கும் நினைவுவிழாக் கொண்டாட வேண்டும். தெய்வம் போற்ற வேண்டும். இவ்வளவும் செய்யும் இல்லறத்தான் தன்னையும் காத்துக் கொள்ளவேண்டும்; தான் இருந்தால்தானே இவ்வளவும் இயற்ற முடியும்?

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் கின்ற துணை.’ “துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.’ ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்

தான் என்றாங்(கு) ஐம்புலத்தா றோம்பல் தலை.”

வள்ளுவர் குறளின்படி, இல்வாழ்வான் ஆற்ற வேண்டிய பணிகள், ஒரு நாட்டுத் தலைவனின் கடமைகள் போல் காணப்படுகின்றன அல்லவா?

அப்படியென்றால் வள்ளுவர் கூறும் இல்லம் எத்துணை மாண்புடையதென்று நோக்குக! ஆனால், இன்று சில பணக்கார இல்லங்களில் படித்தவர் வாழும்