பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 வள்ளுவர் இல்லம்

நெருப்போ தொட்டபோது மட்டுமே - அதிலும் தொட்ட இடத்தில் மட்டுமே சுடும். அதற்கு ஏதேனும் மருத்துவம் செய்தால் விரைந்து புண் ஆறும். தீயவையோ அப்படி யல்ல; செய்த போதும் தீமைதரும்; செய்த பின்னும் தீமைதரும்; இறந்த பின்னும் பழியை நிலைநிறுத்தும். மேலும், நெருப்பு தொட்டவர்க்கு மட்டுமே துன்பம் தரும். தீயதோ, செய்தவர்க்கும், அவரைச் சேர்ந்தவர்க்கும், அவரது வழிவரும் மரபினர்க்கும் தீமை தரும். மற்றும், நெருப்பு, நெருங்கினவரைச் சுடுகின்ற ஒன்றைத் தவிர, உணவைப் பதம் செய்தல், வெளிச்சம் தரல், குளிர் போக்கல் முதலிய மற்றைய பாகங்களில் எல்லாம் நன்மையே தருகின்றது. தீயவையோ அணுவளவு நன்மையும் தராமல், அளவிட முடியாத தீமைகளையே தரும். இந் நுட்பங்களை யெல்லாம் நோக்கி, “தீயவை தீயினும் அஞ்சப்படும்” என்ற ஆசிரியரின் அறிவின் மாட்சிதான் என்னே! தீயவற்றிற்கு அஞ்சவேண்டியதற்குக் காரணமும், தீய வற்றின் கொடுமை மிகுதியும் இக்குறளில் விளக்கப் பட்டுள்ளன. சுடும் என்ற ஒரு காரணத்திற்காக, பலவித நன்மைகளைச் செய்கின்ற நெருப்பிற்கே நாம் அஞ்சும்போது, எந்நன்மையும் செய்யாமல் தீமைகளையே தருகின்ற தீச் செயல்கட்கு நாம் எவ்வளவு அஞ்சவேண்டும்? என்பதையும் ஆசிரியர் சுட்டாமல் சுட்டியுள்ளதை உய்த்துணர்க!

நம்மை வருத்தும் பகைவர்க்கும் நாம் தீமை செய் யாமல் இருப்பதுதான், அறிவு மிக்க செயல்களுக்குள் அறிவு மிக்க செயலாகும். தம்மை வருத்தும் பகைவரல்லாத