பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 183

கூடிக் கூட்டுறவு கொண்டு வாழ்வது ஒப்புரவு எனவும்; இருப்பதைக் கொடுப்பது ஈகை எனவும் - இல்லாவிடினும் முயன்று வருந்திக் கொடுக்க முற்படுவது ஒப்புரவு எனவும் உணர்க!

முன்னர், சில அதிகாரங்களில் இல்வாழ்வார் செய்யக் கூடாதனவற்றைப் பற்றி ஆசிரியர் சொல்லி வந்தார். ஈண்டு செய்ய வேண்டியதைச் சொல்லுகின்றார். பொதுவாகச் செய்யக் கூடாதனவற்றையெல்லாம் தொகுத்துத் தீவினை’ என்பதனுள் அடக்கி, இறுதியில் தீவினையச்சம் என்னும் அதிகாரத்தை அமைத்தார். பின்னர் (தீவினைகட்கு அஞ்சி) உலகோடு ஒத்து வாழுங்கள் - என்று இவ்வதிகாரத்தையமைத்தார். துப்பு என்னும் பகுதியினடியாகத் தோன்றிய துப்புரவு என்னும் சொல்லைப் போல, ஒப்பு என்னும் பகுதியினடியாக இந்த ஒப்புரவு என்னுஞ் சொல் தோன்றியது. ஒப்புரவு என்றால் ஒப்புமை - ஒத்த தன்மை - ஒற்றுமை என்று பொருள். இருவர் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்றால், ஒருவர்க்கொருவர் துன்பம் போக்கலும், குறை நீக்கலும், இருப்பவர் இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவதும் செய்து வாழ்கின்றார்கள் என்பது தானே பொருள்? இதே ஒத்த வாழ்க்கையொற்றுமையை உலகினிடம் செலுத்துவதே ‘ஒப்புரவு’ என உணர்க!

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ வுலகு.”

மேகமானது நம்மிடம் எந்தப் பதிலுதவியையும்

எதிர்பார்த்து மழை பெய்வதில்லை. அத்தகைய மேகத்திற்கு