பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 187

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.’ பயன்படத்தக்க மரம் பயனுள்ள பழங்களைப் பழுத்துப் பலருக்கும் - பறவைகட்கும் பயன்படுவதைப் போல, ஒப்புரவறிந்தவனது செல்வமும் பலர்க்கும் பயன்படும்.

‘பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.” பயன்படாத முள்மரம் - நச்சுமரம் முதலியவற்றி னின்றும், விறகு- நிழல் முதலிய பயன்களைத் தருவதோடு நல்ல கனியையும் தருகின்ற மரத்தைத் தனித்துப் பிரிப் பதற்காகப் பயன்மரம்” என்றார் ஆசிரியர். வெளி யூரிலோ, மலைப்பிளவிலோ, மலையுச்சியிலோ உள்ள மரம் பழுத்தால் அப்பழங்களைப் பெறப் பெரிதும் முயல வேண்டும்; ஆனால் இது அத்தகையதன்று; மிக எளிதில் பெறத்தக்கது என்பதையறிவிக்கவே, ‘உள்ளுர்’ என்றார். காயாக உதிர்ந்தால் எடுத்துப் பழுக்க வைக்க வேண்டிய முயற்சி தேவைப்படுவதோடு இயற்கைச் சுவையும் இராது; மரத்திலேயே பழுத்தால் முயற்சி குறைவதோடு, இயற்கைச் சுவையும் இருக்கும் என்பதை யுள்ளடக்கியே ‘பழுத்தற்று’ என்றார். ஊர் நடுவே பழுத்த மரத்தின் பயனுள்ள கனியைப் பலரும்-பறவைகளும் எளிதில் வேண்டியாங்குப் பயன்படுத்திக்கொள்வது போல் ஒப்புரவாளனுடைய செல்வத்தையும் பலரும் எளிதில் வேண்டியாங்குப் பயன்படுத்திக்கொள்வர்.

பல உறுப்புகளாலும் பலவகை மருந்துகளாகப் பயன் பட்டு, தவறாமல் எளிதில் கிடைக்கப்பெற்று, பலவகை