பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வள்ளுவர் இல்லம்

நோய்களையும் போக்குகின்ற (முருங்கை, வேம்பு போன்ற) சில மரங்களைப்போல, ஒப்புரவாளனுடைய செல்வமும், தவறாமல் எளிதில் கிடைக்கப் பெற்றுப் பலர்க்கும் பல வகையான பயன்களைச் செய்யும்.

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்.”

ஈண்டு வள்ளுவர் தொடர்ந்து முன்று குறள்களில் ஒப்புரவாளனுடைய செல்வத்திற்கு உவமையாக, நீர் நிறைந்த ஊருணி, உள்ளுர்ப் பழுத்த பயன்மரம், மருந்தாகித் தப்பா மரம்-என்னும் முன்று பொருளைக் கூறுவானேன்? ஏதேனும் ஒன்று கூறினால் போதாதா?என்று வினவலாம். இம்முன்றுவமைகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் தோன்றினும், உண்மையில் சிறு சிறு வேற்றுமையுடையனவாம். அதாவது:- ஒப்புரவாளனுடைய செல்வம் எப்போதும் எல்லோர்க்கும் குறைவில்லாமல் நிறையப் பயன்படும் என்பதை யறிவிக்க நீர் நிறைந்த ஊருணியையும்; அரிய முயற்சியின்றி எளிமையில் பயன் படும் என்பதையறிவிக்க உள்ளுரிலேயே பழுத்த பயன் மரத்தையும்; தவறாமல் பல வகையான பயன்களைத்தரும் என்பதை யறிவிக்க மருந்துகளாகித் தப்பாது பல நோய்களைப் போக்கும் மரத்தையும் உவமை கூறினார் ஆசிரியர் என்க! ஊருணி, பழுத்த மரம், மருந்து மரம் என்னும் இம்முன்றையும், யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டு மானாலும், கைம்மாற்றுக் கட்டாயமின்றி, அரிய முயற்சியு மின்றி, எளிமையில் பயன்படுத்திக் கொள்ளலாமன்றோ?