பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. F6

முன் சொன்னது போல் பரந்த அளவில் உலகிற்கு ஒப்புரவு செய்தல் இல்லறத்தார்க்கு இயலாது போயினும், தம்மால் இயன்ற அளவாயினும் ஏழையெளியவருக்கு ஏதேனும் உதவலாமல்லவா? இல்லார்க்கு ஈவது சிறிதா யினும் அது பெரிய ஈகையாக மதிக்கப்படும். ஆனால் உலகியலில் சிலர் - சிலரென்ன - பலர், கைம்மாறு கருதியே - அதாவது பதிலுதவி எதிர்பார்த்தே ஒருவர்க் கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். இஃது ஈகையாகாது. இத்தகு செயல்களை வேறு பெயர்களா லேயே அழைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் இன்னொருவர்க்குப் பொருளுதவி செய்தாலும், உணவளித் தாலும் உடலுழைப்பு நல்கினாலும், திரும்ப அவர் இவர்க்குச் செய்து விடுகிறார். முதலில் உதவி செய் பவர்க்கும், திரும்ப அதனைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் குறி இருக்கிறது. உதவி பெற்றவர் திரும்பச் செய்யவில்லையென்றால், உதவி செய்தவர் மீண்டும் அது போல் செய்ய ஆர்வமோ அக்கறையோ கொள்வதில்லை. எனவே, முதலில் உதவி செய்யும் வசதியுள்ளவரும், பின்னர் அதனைத் திரும்பச் செய்யும் வசதி உள்ளவரும் ஒருவர்க்கொருவர் ஒன்று கொடுத்து வாங்கிக் கொள்ளும் செயலை ஈகை என்னும் பெயரால் குறிப்பிட முடியாது; இரவல் அல்லது வட்டியில்லாத கடன் என்றுதான் குறிப்பிட