பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வள்ளுவர் இல்லம்

முடியும். இக்கருத்தை வள்ளுவர் மிக அழகாகவும் அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாகவும் கூறியுள்ளார்.

“வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து”.

இக்குறளில், வறியார்க்கு ஒன்று ஈவதே என்று ‘ஏ’ போட்டிருப்பதிலுள்ள அழுத்தத்தையும் தேற்றத்தையும் கவனிக்க வேண்டும். மேலும், ஒரு பசையும் - சிறு பசையும் இன்றி வற்றிப்போனவர் என்பதை வறியார்’ என்னும் சொல் அறிவிக்கின்றதன்றோ? அவரால் பதில் உதவி எதுவும் செய்ய முடியாது தானே! அவ்வறியவர்க்குப் பல கொடுக்க வேண்டும் என்பதில்லை - அவர்க்கு மிகவும் இன்றியமையாததான ஒன்று கொடுத்தாலே போதும்; அதுவே உண்மையான ஈகை என்கிறார் வள்ளுவனார். இஃதல்லாத மற்ற ஆடம்பர உதவிகள் எல்லாம் ஆசிரியர் கருத்துப்படி குறியெதிர்ப்பை ஆகும். பெண்ணொருத்தி தன் பக்கத்து வீட்டுக்காரிக்கோ அல்லது எதிர் வீட்டுக்காரிக்கோ ஒருபடி உப்போ அல்லது பப்போ இரவல் கொடுத்து விட்டு, மீண்டும் ஒரு நாள் அதே குறி அளவை எதிர்பார்த்திருந்து திரும்பப் பெற்றுக் கொள் கிறாளே, அதற்குத் தான் குறியெதிர்ப்பை என்று பெயராம். வறியாரல்லாதார்க்குச் செய்யும் உதவி களெல்லாம் இன்னவே!

இல்லாதார்க்கு இருப்பவர் ஈயவேண்டியது கடமை தான் எனினும், ஒருவர் கொடுக்க மற்றொருவர் வாங்கக் கூடிய நிலையில் சமுதாய அமைப்பு இருப்பதை எண்ணும் போது, என்னவோ போலிருக்கிறது. ஒருவரிடம் வாங்கிப்