பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 193

பிழைக்கும் நிலையில் எவரும் இருக்கக் கூடாது. அது மிகவும் தாழ்வன்றோ! வாங்கிப் பிழைப்பது நல்லதுசிறந்தது என்று எவரும் சொல்ல முடியாதே! அப்படியே ஒருவர் சொன்னாலும் - ஏன் - ஒரு தெய்வத்துதரே வந்து வாங்கிப் பிழைப்பவர்க்கே மேலுலகம் கிடைக்கும் என்று அடித்துப் பேசினும், பிறரிடம் வாங்கிப் பிழைப்பது தீயதே - தாழ்ந்ததேயாகும். என் செய்வது சமுதாயத்தில் ஆதரவற்றவர்களும் உறுப்பிழந்தவர்களும் பிணியாளரும் இன்ன பிறரும் இப்படித்தானே பிழைக்க வேண்டியுள்ளது! இன்னோரன்ன ஏழையர்க்கு மற்றவர் உதவ வேண்டியது கடமையன்றோ? எனவே, முடியாதவர்க்கு முடிந்தவர் உதவியே தீரவேண்டும். அதனால் எத்துணைக்கேடும் இழப்பும் நேரினும் தயங்கலாகாது. ஏன் - கொடுப்ப வர்க்கு மேலுலகம் இல்லையென்று எவரேனும் தலை கீழாழ்ச் சொல்லி மிரட்டினாலும், பிறர்க்குக் கொடுத் துதவுவதே சாலச் சிறந்தது.

‘நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று’.

கொடுக்குந் துறையில் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வரும் ஒருவகை நெறி மிகவும் போற்றத்தக்கது: தம்மிடம் ஓர் இரவலன் (பிச்சைக்காரன்) வந்து இரவு (பிச்சை) கேட்பானேயாயின், அவனுக்கு இடுவர். தம்மிடம் உணவோ அரிசியோ இல்லையாயின், ‘இல்லை என்று சொல்ல மாட்டார்கள்; அதற்குப் பதிலாக, நேரமாய் விட்டது போய்வா’ என்றோ, இன்னோர் இடம்போய்ப் பாரு’ என்றோ சொல்லுவார்கள். ஏன்? இல்லையென்று கூறாமல்