பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 197

பன்னூறாயிரவர் பசிப் பிணியால் நைந்து நொந்து வாடி வதங்குகின்றனரே - அவர் தம் காலி வயிறுகள் அல்லவா மீந்த பொருளைப் போட்டு வைக்க வேண்டிய உண்மை யான இரும்புப் பெட்டிகளாகும் மீந்த பொருளைப் பசித்தோரின் வயிறுகளில் போடுவது, அரசாங்க வங்கிகளில் போடுவது போல் இருதிறத்தார்க்கும் பெரும் பயன் விளைக்கும். பசித்தோரின் வயிறுகளில் போடுவது என்றால், உணவு மட்டும் என்றும் போட்டுக் கொண்டிருப்பது என்று பொருளில்லை; அவர்கட்கு நிலையாக எப்போதும் உணவு கிடைக்கும், வகையில் தொழில் அமைப்புக்களை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பு உண்டாக்கித் தருவதும் அதனுள் அடங்கும்.

இவ்வாறு தாமே பலர்க்கும் உணவு பகுத்தளித்தும், மேலும் நிலையாக எப்போதும் உணவு கிடைப்பதற்கு வழி செய்தும் இல்லறம் நடத்துபவர்களைப் பசிப்பிணி வருத்தாது என்பது மட்டுமல்ல-தீண்டவுஞ் செய்யாது. ஏன்? பிறர் பசியைப் போக்கும் ஆற்றல் உடையவருக்குத் தம் பசியைப் போக்கும் வழியும் தெரியும் என்பது ஒரு புறம் இருக்க, இவர் ஒருவேளை ஏழ்மையுற்றாலும், இவரால் பயனடைந்த உலகம் இவரது பசியைப் பார்த்துக்கொண்டே வாளா இராதன்றோ! எனவே, இல்லாதவரின் பசியைப் போக்குவது இல்லறத்தார்க்குக் கடமையாகும். அது சிறந்த சேமிப்பு மாகும். இது வள்ளுவரின் பொருளாதாரக் கொள்கைகளுள் ஒன்று! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கி யத்தில் தனி மனிதன் பொருளாதாரமும் சமுகப்பொருளா