பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வள்ளுவர் இல்லம்

ஒருவருடைய உடல், உடைமைகள் எல்லாம் அழிந்து விடும்; ஆனால் அவரது உயர்ந்த புகழ்மட்டும் என்றும் அழியவே அழியாது.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.’ “உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.’ “ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.’

இவ்வகையாக, அழியும் பொருளைக் கொடுப்பதால் அழியாப் புகழ் உண்டாகும் என்னும் நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் அறிவு எல்லார்க்கும் இருப்பதில்லை; இருந்தால், பொருளைப் பூட்டி வைத்து விட்டுப் புகழைக் கோட்டை விடுவார்களா? பொருளைப் பிறர்க்கு உதவுவதால் நமக்கு இழப்பு ஏற்படுவது போல் தோன்றினும் அது உண்மையான இழப்பாகாது. அதில் வளர்ச்சியிருக்கிறது - அதாவது, அந்த இழப்பில் புகழாகிய ஆக்கம் (செல்வம்) அடங்கியிருக்கிறது. இப்புகழைப் பெற்றவர்கள் இறந்து விட்டாலும் உண்மையில் இறந்தவராகக் கருதப்பட மாட்டார்கள்; என்றும் உள்ளவராகவே மதிக்கப் பெறுவார்கள். அதாவது, அவர் தம் ஊன் உடம்பு மறையினும் புகழுடம்பு மறையவில்லையன்றோ? இவ்வாறு ஆக்கத்தைத் தரும் இழப்பையும், என்றும் இருக்கச் செய்யும் இறப்பையும் கைவரப் பெறுபவரே உயர்ந்த வித்தகராவர். இத்தகு புகழ் வித்தகர்கள் துறவிகளை