பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வள்ளுவர் இல்லம்

ஒன்றும் இல்லையே! யாருக்கும் எத் தீங்கும் செய்ய வில்லையே! நாங்கள் உண்டு - எங்கள் காரியம் உண்டு என்று தானே இருக்கிறோம்! அப்படியிருக்கவும் எங்களைப் பலர் இகழ்ந்து பழிக்கின்றார்களே! இது ஏன்?’ என்று கேட்கலாம். இவர்கள் இழிசெயல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை; புகழான காரியம் செய்யாதிருப்பதே பெருங்குற்றமாயிற்றே! இஃது ஒன்றே போதுமே உலகம் இவர்களைப் பழிப்பதற்கு உடலாற்றலும் அறிவு நலனும் பொருள் வசதியும் பெற்றிருப்பவர்கள் உலகிற்குப் பல நல்ல பணிகள் புரிய வேண்டியது கடமையாயிற்றே! உலகத்தாரின் ஒத்துழைப்பால் - கூட்டுறவால்தானே இவர்கள் வாழ் கிறார்கள்! எனவே, இவர்கள் உலகிற்கு உதவாதிருப்பது, புகழை இழந்ததாக மட்டும் ஆகாது - இகழை வலியத் தேடிக்கொண்டதாகவும் ஆகும்.

“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்.” ‘வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.”

வள்ளுவனார்க்கு இங்கே கசப்பு வந்துவிட்டது போலும் புகழ் இல்லாதவரது உடம்பைச் சுமந்து கொண்டிருக்கும் மண்ணால் பயனில்லை என்கிறார் ஆசிரியர்.

“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த கிலம்.’

புகழ் இல்லாதவரைப் பொறுத்த நிலம் என்று ஆசிரியர் சொல்லவில்லை; இசையிலா யாக்கை பொறுத்த