பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 207

நிலம்’ என்றே ஆசிரியர் கூறியுள்ளார். இசையிலா யாக்கை என்றால், புகழ் இல்லாத உடம்பு என்று பொருளாம். இதிலிருந்து, புகழ் இல்லாதவரது உடம்பில் உயிர் இல்லை - அது வெற்றுடம்பாகிய பிணமே என்பது புலனாகிறதன்றோ? மேலும், உடம்புக்கு உண்மையான உயிர் புகழ்தான் என்பதும் புலனாகுமே. எனவேதான், புகழ் பெற்றவர்களின் உடம்பு சுட்டெரிக்கப்பட்டுங் கூட அல்லது புதைக்கப்பட்டுங்கூட, புகழ் என்னும் உயிர்ப் பொருள் உலகில் உலவிக் கொண்டிருக்கிறது போலும்! இவ்வளவு அரிய கருத்துக்களும் ‘இசையிலா யாக்கை” என்னும் குறள் தொடரிலிருந்து கிடைக்கப்பெற்றனவன்றோ? இம்மட்டுமா! புகழ் இல்லாதவர்கள் இருப்பதைவிட இறப்பதே மேல் - அதனால் நிலத்தின் சுமை குறையும் என்னும் கருத்தும் இதிலிருந்து கிடைக்கின்றதல்லவா? சுமந்த நிலம் என்னாது பொறுத்த நிலம்’ என்று ஆசிரியர் கூறியிருப்பதிலிருந்து, போனால் போகிறதென்று இரக்கப்பட்டு நிலம் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு குறிப்புக் கிடைக்கின்றது. புகழில்லாதவர்களால் ஒரு பயனும் இல்லையாதலின், அவர்களைச் சுமந்துகொண்டி ருக்கும் நிலப்பகுதியால் பயனில்லை என்றார் திருவள்ளுவனார். அப்படியே ஏதாவது அந்நிலத்தால் பயன் இருக்குமாயினும், ஒன்றுக்கும் உதவாதவர்களையும் இழி செயல்களே புரிபவர்களையும் சுமந்துகொண்டிருக்கிற ஒரு வசையே போதுமே அந்நிலத்திற்கு! எனவே, வசை (பழி)யில்லாத முறையில் அந்நிலத்தால் வளப்பமான பயன் அளிக்க முடியாது - என்னும் கருத்தில் வசையிலா