பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகன்ார் 209

உண்மையில் சின்னாட்கள் உயிர் வாழ்ந்ததாகவே பொருள். அதாவது, அவன் உயிரோடு பல ஆண்டுகளாக உலவிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அவன் எப்போதோ இறந்துவிட்டதாகவே பொருளாம். எனவே, வசையின்றி இசையுடன் வாழ்பவரே உண்மையில் உயிர் வாழ்பவரா வார்கள்; இசையின்றி வசையுடன் வாழ்பவரோ உயிர் வாழ்பவராகக் கருதப்படமாட்டார்கள்.

இதனால்தான், பிறந்தால் புகழோடு பிறக்கவேண்டும்; இல்லையெனின் பிறவாதிருப்பதே நல்லது என்று வள்ளுவப் பெருமான் திருவாய் மலர்ந்துளார். பிறக்கும்போதே எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்? அப்படியென்றால் பொருள் என்ன? அதாவது, உலகில் மக்களாய்ப் பிறந்தவர்கள் நற்பணிகள் புரிந்து புகழோடு வாழவேண்டும்; அங்ஙனம் வாழாதவர்கள், பிறந்தும் பிறவாதவராகவே கருதப்படுவார்கள் - என்பது பொருள்.

‘வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்.’ “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.’

வள்ளுவனார் கூறியாங்குப் புகழுக்கு இவ்வளவு புகழ் இருக்கும்போது, பலர் புகழ்ச் செயல்கள் புரியாதிருப்பது ஏன்? காரணம் இன்றிக் காரியம் நிகழுமா? புகழில் ஆவல் மட்டும் இருந்தால் போதுமா? அதற்குரிய செயல் செய்ய வேண்டாமா? செய்யாமல் புகழ்ந்துகொள்ள முயல்வதால் யாது பயன்? இல்லாத புகழை இருப்பதாகப் பொய்யாய்ப் புனைந்துரையாய்ப் புகழ்ந்து கொள்ளலாமா? இன்னொருவர்