பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

மக்கள் மதிப்புரை பேராசிரியர் சுந்தர சண்முகனார் அந்நாளில் அவ்வப் போது எழுதி வெளியிட்ட திருக்குறள் தெளி பொருள் விளக்கங்களுக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து வந்த மதிப்புரைகளில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. திரு. ப. கடேசலிங்கம், இலங்கை, 12-1-1949

‘தங்கள் குறள் ஆராய்ச்சி நூல் எல்லோரும் படிக்கக் கூடிய முறையில் வெளியிடுவது பற்றி மிகவும் சந்தோசம். தமிழ் நாடே தங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. திரு. ஆ. தி. நடராஜன், ஆர்க்காடு, 13-1-1949

“திருக்குறள் தெளிவு கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன். தமிழ் உலகத்திற்குத் தாங்கள் செய்யும் தொண்டு போற்றுதற்குரியதாகும். தமிழர்கள் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டவர்களாவார்கள்.”

திரு. இராவணதாசன், மருதுர், 22-11-1958

‘திருக்குறளுக்குப் பதின்மருக்கு மேலோர் உரை கண்டனர். கண்டும், வள்ளுவரின் உள்ளத்தைக் காணவும் மக்களின் மயக்கத்தைத் தீர்க்கவும் அவை வழி செய்வதா யில்லை. இந்நிலையில் தங்கள் ஆராய்ச்சியுரை மக்கள் மயக்கம் தெளிந்து, சிறுமை போக்கிப் பெருமையடையப் பெரிதும் வகை செய்யும். இந்தச் சீரிய முயற்சியை வரவேற்கிறேன்.” புலவர் திரு. கு. கா. கிருட்டிணமூர்த்தி, குலசேகரப்பட்டிணம், 10-12-1958

‘பலர் மதம், சாதி, கடவுள், அரசியற் கொள்கை முதலிய சக்திகளையே குறள் மணிக்கு மெருகிடுவதாக