பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

நினைத்துப் பூசி மாசுபடுத்தி வந்தனர். தங்கள் புத்துரை, மணியைத் தூய்மை கெடாதபடி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இது தமிழ்த் தொண்டே.” திரு. நா வே பிள்ளை, உதவிப் பதிவாளர், சின்னசேலம், 1-2-1959

“பண்டறியேன் புலவர் சுந்தர சண்முகனாரை. இன்றறிந்தேன் ‘குறளின் அசைகளுக்கும் அளபெடை களுக்கும் இலக்கணத்தோடு ஆழ்ந்த அரும்பொருள் கூறும் ஆங்கிலமும் அறிந்த பெரும் புலவரேறு’ என்று. இது உயர்வு நவிற்சியன்று; உண்மை!” திரு. ஆடவல்லான், முகவை, 18-2-1959

“தாங்கள் மேல் நாட்டில் பிறந்திருந்தால் இத்தகைய ஆராய்ச்சியைப் பாராட்டி நோபல் பரிசும் தந்திருப்பார்கள். ஆனால் இங்கோ......! உண்மையான வள்ளுவரை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டுபவரைத் தமிழ் மக்கள் போற்றி மகிழ்ந்தாரிலர். போற்றும் நிலையில் தமிழகம் இன்றுள்ளதாயின், புலவரின் திருக்குறள் வெளியீடு கோடிக்கணக்கில் விற்பனையாக வேண்டுமே! காலம் வரத்தான் போகிறது - கனவு நனவாகும்’. மலேயா நாட்டு தமிழ் முரசு மே, 1959 இதழ்

“சண்முகனார் உரையில் பல நயங்கள் காணப்படு கின்றன. ஆங்காங்கே தற்புதுமை (Orginally) புலப்படுகிறது...... இத்தகைய நல்லுரைக்குத் தமிழ்ப் பெருமக்கள் பேராதரவு அளித்தல் வேண்டும். பேராசிரியர் தி. முத்துக் கண்ணப்பர், சென்னை, 1977

சுந்தர சண்முகனாரின் திருக்குறள் ஆய்வு நூல்கள், மிக நுண்மையான் அதுவரை குறளாய்வாளர் எவரும் கண்டறியாத ஆழ் பொருள் பொதிந்தவை. அவரைப் பழைய குறள் உரையாசிரியர்கள் பதின்மரையும் விஞ்சியவர் என்று கூறின் அது மிகையாகாது.