பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 15

நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே இல் வாழ்க்கை வாழ்பவன்’ என இக்குறளில் ஆசிரியர் கூறினார். (வாழ்க்கையை வாழ்தல் - அதாவது வாழும் வாழ்க்கை).

இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். ‘எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பது போல், இல்வாழ்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவராகி விடுவார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லற மாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்றபடி பேருக்குத் திருமணம் செய்துகொண்டு பேதுறுகின்ற பேதைப் பித்தர்கள் எத் துணையோபேர்! இவர்களெல்லாரும் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி வாழ்பவரே வாழ்வாராவார் என்ற கருத்தை யும் அடியொற்றித்தான் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்’ என்றார் வள்ளுவப் பெருமானார்.

இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பு’ என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வு தான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ? எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான