பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வள்ளுவர் இல்லம்

உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித்தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட் கருத்து.

இக்குறளில் உள்ள முயல்வார்’ என்பதற்கு உலகியல்பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும், தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கையல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

உலகில் எந்த உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டாலும் ஆணும் பெண்ணுமாயிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படு வதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே! இவ்வாறு அமையாத வாழ் வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அறைகுறை வாழ்வே. மனைவி மக்களுடன் வாழ்ந்தறியாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப்பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு வாழ்வுக் காரியங்களில் சமுகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நிறையப் பிள்ளை குட்டி பெற்ற