பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 19

உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும், உண்மையில் அறம் என்று சொல்லப்படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான்; அந்த இல்வாழ்க்கையும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம்.

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்ப தில்லாயின் நன்று”

‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்பதற்கு வாடிக்கையாக ஏதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்தனையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப்படுவதுண்டு; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்வதுண்டு. இங்கே உண்மையான கருத்தாவது: அறமே இல்வாழ்க்கைஇல்வாழ்க்கையே அறம். கரும்பே கன்னல்-கன்னலே கரும்பு என்பது போல, அகராதி தொகுப்பவர்கள் அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங் கூட எழுதி வைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்பதே.

‘அறன் எனப்பட்டதே’ என்பதின் இறுதியிலுள்ள ‘ஏ’ துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக்காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, ‘அஃது என்ற சொல்லுக்கு அந்தத் துறவறமும் எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர். ஏகாரத்தைத் தேற்ற