பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 21

எவ்வளவு பாடுபட்ட மனிதன் தெரியுமா? அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும் இத்நேரம் எவ்வளவோ மேல் நோக்கத் துக்குக் கொண்டு வந்திருப்பாரு’ என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சு வழக்கு இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுக்கப்பட்டது. உண்மைதானே இது? இதே கருத்தைத்தான்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’

என்றார் திருவள்ளுவர்.

எனவே தெய்வநிலை யடைவதற்குரிய நேர்பாதைப் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும்!

இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று:உலகில் நல்லவரோ-கெட்டவரோ எவர் இறந்தாலும் ‘சிவலோக பதவியடைந்தார் வைகுண்ட பதவி யடைந்தார் என்று கூறுதல் வழக்கம். இதிலுள்ள உண்மை யாது: செத்தவரைத் தெய்வமாக மதிக்கிற உண்மைதான். செத்தவருக்கு எவ்வளவு படையல்கள்-வழி பாடுகள் நடக்கின்றன தெரியுமா? செத்துப்போன கெட்ட வனையும் சமுகம் மதித்துத் தெய்வமாக ஏற்றுக் கொள்கிறது எனில், ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்று வள்ளுவர் சொல்லி யிருப்பதில் என்ன தவறு! என்ன தடையிருக்க முடியும்?

தெய்வங்கள் மண்ணுலகில் நம் நடுவே வெளிப் படையாய்க் காணப்படாமையின் அவை விண்ணுலகில்