பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளுவர் இல்லம்

வைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளை களுக்குள் பெண் பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக் கொண்டு அயலார் சொத்தாய்ப் போய்விடு கின்றனர். ஆண் பிள்ளைகளோ, திருமணம் செய்து வைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர் களுக்கு மனைவி என்ன-மாமனார் என்ன-மாமியார் என்ன -மைத்துனர்கள் என்ன-மைத்துணிகள் என்ன - இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம் போல ஒடிக்கொண்டிருக் கின்றனர். இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால், கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள்தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு - அவன் தாழ்வு-அவள் தாழ்வு இன்ப துன்பம் இரண்டிலும் இறுதி வரையும் இணைந்து நிற்பவள் அவளே! எனவேதான், அவளை வாழ்க்கைத்துணை என்று வள்ளுவர் கூறுகிறார். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத்துணை'’

இங்கே வள்ளுவர் அளவு மீறிப் புனைந்துரைத்து விட்டார்; ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந் திருக்கலாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே - வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர்தமை வாழ்க்கைத்துணை எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன அவ்வளவு தெரியா தவரா? அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகிவிட முடியாது; மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத்