பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளுவர் இல்லம்

‘மனைமாட்சி இல்லாள்க ணில்லாயின் வாழ்க்கை

யெனைமாட்சித் தாயினு மில்’

இங்கே வள்ளுவர்க்கு ஒன்றும் ஓடவில்லை-ஒன்றும் புரியவில்லை - ஒரே குழப்பம் - உணர்ச்சி வயப்பட்டு விட்டார். பிறமாட்சிகளினும் மேலானதாக மனைமாட்சியைச் சிறப்பிக்க வந்த ஆசிரியர், இந்த மாட்சி இருந்தாலும் போதாது - அந்த மாட்சி இருந்தாலும் போதாது என்று எவையேனும் சில மாட்சிகளையாயினும் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? எதைக் குறிப்பிட்டாலும் ஈடாகாதுபோல் தெரிகிறது. எனவே போங்களையா, அது எந்த மாட்சி யாயிருந்தாலும் முடியாது என்னுங் கருத்தில் ‘எனை மாட்சித்தாயினும் என்று சொல்லிவிட்டார். மனைமாட்சி இல்லாவிடின் வாழ்க்கை இனிக்காது - சிறக்காது என்று சொல்லியிருக்கலாமே எனின், வாழ்க்கை இருந்தல்லவா அதன் பிறகு இனிப்பது-சிறப்பது வாழ்க்கையே இல்லை போங்களையா என்று சொல்பவர்போல், எனை மாட்சித் தாயினும் இல் என்று ஒரேயடியாய் அடித்துவிட்டார். எனவே மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்? மனைவிக்கு மாண்பு இருந்தால் குடும்பத்தில் இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால் குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது.

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை'’

இந்தக் குறள், குடும்ப விஞ்ஞானத்தின் எல்லைக் கோட்டைத் தொட்டுவிட்டது - இல்லை, எல்லைக்