பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 31

‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்றார் ஒரு பெரியார். கற்பு எனப்படுவது, கட்டிய கணவன் கல்லாயிருந்தாலும் வேறு எவரையுங் கருத்தாலும் கருதாத தூய்மை என்கின்றனர் ஒருசிலர். ‘பிறந்த வீட்டில் பெற்றோரும், புகுந்த வீட்டில் கணவன் முதலியோரும் கற்பித்தபடி ஒழுகுதலே கற்பு’ என்கின்றனர் ஒருசிலர்.

‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்’ என்னும் அழகு பொருந்தக் கற்பு என்னும் சொல்லுக்கு நாம் பொருள் காண்போமாயின், திருக்குறளுள் வாழ்க்கைத் துணை நலம் என்னும் இப்பகுதியுள், பெண்கட்கு இருக்க வேண்டுவனவாகக் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் கற்று, அவற்றைச் செயல் முறையில் செய்து காட்டுவதே சிறந்த கற்பாகும் என்று ஒருவாறு துணியலாம். இதனுள் அடங்காததாக ஏனையோரால் இயம்பப்படும் கற்பு நிலைதான் யாதுளது?

‘பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு, பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு’ என்னும் மொழிப்படி, இருப்பதைக் கொண்டு இல்லாததையும் ஈட்டி, கணவன் களிக்கக் கற்புக் கடன் பூண்டு திகழும் ஒரு மங்கையை மனைவியாகப் பெற்ற மணவாளனுக்கு, அவளினும் மாநிலத்தில் பெறத்தக்க மாண் பொருள் வேறு யாது? ஒன்றும் இல்லை.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்’ கணவனையே கடவுளாகக் கருதும் கலங்காத கற்புடைய பெண்கள், இயற்கைக்குத் தாம் அடிமை