பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருப்பது 1947-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை ஐம்பது ஆண்டுகளாகத் திருக்குறள் பரப்பும் வேள்வியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து மறைந்த பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்களின் வள்ளுவர் இல்லம்’ என்னும் திருக்குறள் ஆய்வு நூலாகும்.

திருக்குறளின் பேரால் இதுவரை தோன்றியுள்ள பற்பல வெளியீடுகளினின்றும், வள்ளுவர் இல்லம்’ என்னும் இந் நூலை வேறு பிரித்துணர முடியும். திருக்குறள் - அறத்துப் பால் - இல்லறவியலில் உள்ள இருபது பகுதிகளையும் (அதிகாரங்களையும்) இருபது சிறப்புத் தொடர் கட்டுரை களாக ஆசிரியர் சுந்தர சண்முகனார் இந்நூலில் அமைத்துத் தந்துள்ளார். ஒரு குறளும் விடுபடாமல், உரைக்கு உரையாகவும் - ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ஆராய்ச்சிக் கட்டுரையாகவும் இவ் வெளியீடு மிளிர்வதைக் காணலாம். இந் நூலின் பல இடங்களில் ஆசிரியர் அவர்க்கேயுரிய தனிப் பெருஞ் சிறப்பான துணிவினை, அஞ்சாமையை வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக:

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேடடதாய்’

என்னும் குறளுக்கு ஆசிரியரின் விளக்கம்: ‘பிள்ளைகளின் திறமையை அறியும் அறிவு பெண்கட்கு இல்லையாதலின், பிறர் கூறக் கேட்டே அறிய வேண்டும் என்னும் கருத்துப் படப் பொருள் வரைந்துளார் பரிமேலழகர். தாமே அறியுந்திறன் பெண்டிர்க்கு இருப்பினும், இல்லாவிடினும், ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றபடி தம் சிறப்பில்லாத பிள்ளைகளையும் சிறப்புடையவர்களாகக் கருதுவது பெரும்பாலும் பெற்றோர்க்கு இயல்பாகலின், பிள்ளையின் புகழைப் பிறர் வாயால் கேட்டு மகிழ்வதே பெரு மகிழ்வாகும் என்னும் கருத்துப்படப் பாடியுள்ளார் வள்ளுவர் என்பதைப் பரிமேலழகர் அறிந்திலர் போலும்!”

1948-ஆம் ஆண்டு முதல் பல்லாண்டுகளாக எழுதி வெளியிடப்பட்ட ஆசிரியரின் திருக்குறள் உரை விளக்கங்