பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 35

ஆண் பெண் இருபாலார்க்கும் அறிவுரை வழங்குவதே இக்கருத்து. பெண்களைப் பூட்டி வைக்கும் பேதையர் களே! அவர்கட்கு விடுதலை நல்குங்கள்! எங்கிருப்பினும், எங்குச் செல்லினும் நல்லோர் நல்லோரே அல்லோர் அல்லோரே என்று ஆண்கட்கும், அரிவைமார்களே! ஆண் களால் உங்களை அடக்க முடியாது; நீவிரே நும்மை நேரிதின் நடத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கட்கும் தெளிவுறுத்துகின்றார் தெய்வப் புலவர்.

கணவனோடு ஒன்றி வாழும் கற்புடையாளைத் தேவரும் போற்றுவர். எடுத்துக்காட்டு வேண்டுமானால் கண்ணகி சாலும். கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு, இரண்டறக் கலந்து இயைந்து வாழ்ந்தால், தேவர் என்றென்ன - யாவரும் போற்றுவர்.

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை”

பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு’

புகழுக்குரிய மனைவி கிடைக்கப் பெறாதவன் பிறர்முன் சிங்கம் போல் தலை நிமிர்ந்து நடக்க முடியாது; எல்லோ ராலும் இகழவும் படுவான். நம்மிடம் ஐயா காட்டும் ஆர்ப்பாட்டம் எல்லாம், அடுப்பங்கரையில் அம்மாவிடம் சென்றால் அடங்கிவிடும் என்று பெண்டாட்டி யடியவர்