பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வள்ளுவர் இல்லம்

எப்பொழுதும் எந்நாளும் நன்மையே! என்பதை வற்புறுத்து வதற்காகவே எழுபிறப்பும் தீயவை தீண்டா என்று திருவாய் மலர்ந்தருளினார் திருவள்ளுவனார்.

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.’ பெற்றோர்களுடைய செல்வம் பிள்ளைகளே. பெற்றோர் தொழில் செய்து ஈட்டும் செல்வம் பிள்ளைகளுடையதாம். பெற்றோர்கள் தாம் தொழில் செய்து ஈட்டும் செல்வத்தைத் தம் பிள்ளைகளுடையதாகவும், தம் பிள்ளைகளைத் தம் முடைய செல்வமாகவும் கருதுவது என்றும் இயற்கைதானே இவ்உலகில்!

“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்’ ஒருவர் உண்ணும்போது அவ்வுணவில் பிறர் வந்து கையை இட்டுப் பிசைந்து சிதைப்பாரேயானால் உண்ணு பவர்க்குப் பிடிக்காது. ஆனால் அவருடைய சிறு குழந்தை உணவில் கையை இட்டுப் பிசைந்து வாரி இறைக்குமே யானால் அவ்வுணவு சுவையில் மிகுந்த அமிழ்தத்தைக் காட்டிலும் அவர்க்கு இனிக்கும் என்பது உலகத்தில் உள்ள உண்மைதானே!

பல்வகைச் செல்வங்களைப் படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய பெருஞ் செல்வராயினும் சரியே; குறுகுறு வெனத் தளர் நடை நடந்தும், சிறிய கையை நீட்டி உணவில் இட்டும், தொட்டும், கெளவியும், துழாவியும், உடம்பின் மேலே வாரி இறைத்தும் மனத்தை மயக்குகின்ற