பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 41

மக்களைப் பெறாதோர்க்கு வாழ்நாளில் பயன் ஒன்றும் இல்லை என்னும் கருத்துடைய செய்யுள் ஒன்று, பழந் தமிழ்ச் சங்க நூலாகிய புறநானூற்றில் உள்ளது.

அது வருமாறு:'படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டியும் இட்டும் தொட்டும் கெளவியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை வில்லை தாம் வாழுநாளே” என்பது செய்யுள். ஈண்டுரைத்த குறளின் விளக்கமே இப்புறச் செய்யுள் என்றால் பொருந்தும்.

மற்றும் சில சமயங்களில் பெற்றோர் பெரிய துன்பக் கடலுள் முழ்கியிருக்கும்போது, பிள்ளைகள் வந்து உடம்பைத் தொட்டும், இனிய மழலைகளைப் பேசியும் மகிழ்விக்க, திரும்பவும் பெற்றோர் இன்பக் கடலுள் முழ்கி இறுமாப்பதைக் காண்கின்றோம்.

ஆடம்பர உடிையில் அவாமிக்க இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் தன் இளமையில் மடிப்புக் கலங்காத சட்டையை அணிந்து கொள்கின்றான். எவரேனும் அச் சட்டையைத் தொட்டால், தொடாதே, மடிப்புக் கலங்கிவிடும் என்று சினக்கிறான். தன் தம்பியோ, தங்கையோ மேலே வந்து விழுந்தால், நான் கலங்காமல் வெண்மையான உடை உடுத்தியிருக்கின்றேன்; ஏன் மேலே விழுந்து அழுக்காக்கினீர்கள்? என்று கூறி