பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 43

புகழ்வார்கள். இங்ஙனம் கூறுவதன் கருத்து, குழந்தையின் கொஞ்சல் மிகமிக இனிது என்பதை வற்புறுத்துவதே! அம்மம்மா! குழந்தையின்பம் எத்துணைப் பேரின்பம்!

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்

சிறுகை யளாவிய கூழ்” “மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்’ ஒரு தந்தை தன் மக்களுக்குத் தேடித்தர வேண்டிய பொருள், வீடு வாசலா? நிலம் நீரா? காசு பணமா? அழகிய மணப் பெண்ணா? இல்லையில்லை! இவற்றினும் மேலான கல்வியறிவே! ஏனையவற்றை அறவே அளிக்க வேண்டாம் என்றும் சொல்ல வரவில்லை. அவற்றை மட்டும் அளித்துக் கல்வியை அளிக்காமல் விடுதல் கூடாது என்பது இங்குக் கருத்து. ஏன்? ஏனையவை தந்தைக்குப் பின் அழியினும் அழியும். ஆனால் கல்வி அழியாத விழுமிய பொருளன்றோ? இது குறித்தே

‘எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சை மற்றல்ல பிற’ என நாலடியாரும் நவில்கின்றது. எனவே, தந்தை மகனுக்குச் செய்யும் உதவியாவது, அவையத்தின் கண்ணே எல்லோரினும் முந்தியிருக்குமாறு கல்வி உண்டாக்குதலாம்.

“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்'