பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளுவர் இல்லம்

பிள்ளைகள் அறிவுடையராய் இருந்தால் மகிழ்ச்சி பெற்றோருக்கு மட்டுமா? பெற்றோரைவிட, உலகத்துள்ள உயர்ந்த மனிதர்கள் மிகுதியாக மகிழ்வார்கள். எப்படி? பெற்றோர் தம் வாழ்நாள் வரையும், வீட்டில் மட்டும் மகிழ்வார்கள். உலகினரோ, பிள்ளைகள் இருக்கும் வரையும் இறந்த பின்னும் பல துறைகளில் மகிழ்வார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மகிழ்வார். தொழில் செய்யும் இடத்தில் தலைவர் மகிழ்வார். அரசாங்கம் மகிழும். பயன் பெறும் ஏழைகள் மகிழ்வர். இன்னும் எல்லோர்க்கும் எப்போதும் மகிழ்ச்சியே யன்றோ? திருவள்ளுவர் முதலி யோரின் அறிவு பற்றி அவர்களின் பெற்றோர்களைவிட உலகம் அன்றும் இன்றும் என்றும் - மகிழ்ந்ததே, மகிழ் கின்றதே, மகிழுமே!

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

இரட்டுற மொழிதல் (இரண்டு பொருள் படச் சொல்லுதல்) என்னும் இலக்கண விதிப்படி, இக்குறளுக்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அஃதாவது, ‘பெற்றோராகிய தங்களின் அறிவைக் காட்டிலும் பிள்ளைகள் மிக்க அறிவுடையராயிருப்பது உலகோர்க்கு உவகை யளிக்கும்’ என்பதாம். புலியின் வயிற்றில் பூனை பிறத்தலாகாது. ஆனால், சிப்பியின் வயிற்றில் இப்பி (முத்து) பிறப்பது குறித்து உலகம் உவக்கின்றதன்றோ?

வேறொரு பொருளும் விளம்பலாம் இக்குறட்கு! அஃதாவது, ‘உலகிலுள்ள எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் தங்களைக் காட்டிலும் தங்கள் தங்கள் பிள்ளைகள்