பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அன்புடைமை

ஆட்டைப் பார்ப்பதைப் போல-மாட்டைப் பார்ப்பதைப் போல, ஒருவர் மற்றொருவர்மேல் கொண்டுள்ள அன்பை, நாம் தனியாகப் பிரித்து எடுத்து வைத்துப் பார்க்க முடியாது. ஒருவர் நோய் முதலியவற்றால் துன்புறும்போது, அவர்மேல் அன்பு கொண்டுள்ள மற்றொருவர் கண்ணிர் விடுவார். அக்கண்ணிரைக்கொண்டு, அன்பு உண்டென்று கண்டு தெளியலாம். எனவே, அன்பின் அறிகுறியாகிய கண்ணிரை, வரமுடியாமல் அடைத்து மறைக்கும் ஆற்ற லுடைய தாழ்ப்பாள் எதுவும் இல்லை எனலாம். இதற் கேற்ற சிறு கதையொன்றும் வழங்குவதுண்டு.

நள்ளிரவு; மழை ‘சோ வெனப் பெய்கிறது. அரண்மனை யொன்றில் தகப்பனும் மகனுமாகிய இருவர் திருடச் சென்றார்கள். காவலரால் தந்தையின் தலை துண்டிக்கப்பட்டது. தலையை மட்டும் தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்கு ஒடித் தோட்டத்தில் மண்ணில் மறைத்து விட்டான் மகன். காரணம், தலையைக் கொண்டு தந்தை யினையும் தன்னையும் காவலர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதாகத் தானே இருக்கவேண்டும்!

முண்டத்தைப் பெற்ற முண்டங்களாகிய அரண்மனைக் காவலரால் திருடர்களைத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. அரசன் அமைச்சரொடு சூழ்ந்தான். ‘ஊர்