பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவர் இல்லம்

முழுவதும் தெருக்கள் தோறும் முண்டத்தைப் புரிகட்டி இழுத்துக் கொண்டு போக வேண்டும். எல்லா வீட்டுப் பெண்களும் தவறாமல் தெருவில் வந்து முண்டத்தைப் பார்க்கவேண்டும். அழுகையை அடக்கமுடியாமல் எப் பெண் அழுகிறாளோ, அவளுடைய உடைமைப் பொருளே முண்டம் எனக் கண்டுபிடித்துவிடலாம்” என்பது அமைச்சர் களின் அறிவிப்பு. முண்டத்திற்கு உரிமை பூண்ட மனித குலப்பெண், முண்டத்தைப் பார்த்தும் அழாமல் இருக்க முடியாதல்லவா?

இறந்து போன பெரிய திருடனின் மனைவி, சிறிய திருடனாகிய மகனிடத்தில் செப்பினாள், என்னால் அழாமல் இருக்கமுடியாதென்று. ‘அழாதே அம்மா! அழுதால் என் தலைக்கும் கேடு’ என்று அறிவுறுத்தினான் மகன். தாய் ஒத்துக் கொள்ளவில்லை.

முண்டம் திருடர் வீட்டின் எதிரில் வந்தது. தெருவில் உள்ள முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கீரை இணுக்கிக் கொண்டிருந்த மகன் (சிறிய திருடன்) தவறிக் கீழே விழுந்து விட்டான். “ஐயோ கை ஒடிந்து விட்டதே’ என்று கத்தி அழுதான். “ஐயோ மவனே’ என்று தாயும் ஒப்பாரி வைத்தாள், முண்டத்தைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே, முண்டம் தெரு வழியே சென்று விட்டது. தாயும் மகனும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். துன்பத்திலோர் இன்பம்! எப்படி அரசனின் ஆட்களை ஏமாற்றி அழுது விட்டோமே என்று! அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லையன்றோ! ஆனால், இவர்களின் செயலைக் கேள்விப்பட்ட அரண்மனை முதலமைச்சர் தீர ஆராய்ந்து