பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 49

இவர்களைக் கண்டு பிடித்துவிட்டார். எப்படி! இவர்களின் புன் கண்ணிர் பூசல் தந்து விட்டது அமைச்சரின் அறிவிற்கு! ஆகா, எவ்வளவு அழகிய குறள்!

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணிர் பூசல் தரும்’ பிறரிடத்து அன்பிலாதவன் எச்சில் கையால் காக்கை ஒட்ட மாட்டான் - ஏன் ஈரக் கையைக்கூட உதற மாட்டான்; காரணம் அவ்வீரத்தின் உதவியால் மற்றோர் உயிர் குளிர்ச்சி பெறுவதைப் பொறுக்க முடியாமையே! இவனா ஏனைய பொருளைப் பிறர்க்கு உதவுவான்? ஆனால், பிறரிடத்து அன்புள்ளவனோ எல்லாப் பொருளை யும், தன் உடம்பையும்-ஏன், தன் உடம்பிற்குள் இருக்கும் எலும்பையும் கூட பிறர் விரும்பினால் உதவுவான்.

பாரி முல்லைக் கொடி படர்வதற்காக ஒரு தேரை விட்டுவிடவில்லையா? பேகன் மயிலுக்குப் போர்வை போர்த்த வில்லையா? சிபிச் சோழன் புறாவிற்காகச் சதையை அரிந்து கொடுக்கவில்லையா? குமணமன்னன் தமிழ்ப் புலவர்க்காகத் தலையையே கொடுக்க உடன்பட வில்லையா? இவையெல்லாம், பிற உயிர்களின் மேற்சென்ற அன்பு வெள்ளத்தின் அறிகுறியன்றோ?

‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு’ மாணவர்க்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏற்பட்ட தொடர்பு ஒழுங்காகக் கல்வி கற்பதற்காக! கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தொடர்பு, ஒழுங்காய் வாழ்க்கை நடத்துவதற்காக அரசர்க்கும் ஆட்சிக்கும் ஏற்பட்ட