பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 51

உறவினரிடத்தில் அன்பு காட்டப் பழகியவனுக்கு, உறவினர் அல்லாதவரிடத்தும் ஆர்வம் காட்டும் பழக்கம் தோன்றும். தோன்றவே, அயலார் அனைவரும் அவனுக்கு நெருங்கிய நண்பராகிவிடுவர். எனவே, அவனுக்கு எல்லோரும் நண்பராக இருப்பார்களே தவிர, பகைவ ராகவோ, (பகையும் அன்பும் இல்லாத நடுத்தரமான) நொதுமலராகவோ இருக்க மாட்டார்கள் என்பது தெளி வாகும். எனவே, அன்பு ஆர்வத்தை அளிக்க, ஆர்வம் நண்பனை நல்கும் என்பது புலனாகும்.

உலகில் இன்பத்துடனும், பல்வகைச் சிறப்புக் களுடனும், பழிச்சொல்-குற்றம்-குறை முதலியன இன்றியும் வாழும் பலரைக் காண்கின்றோம். அவர்கட்கு இந்நன்மைகள் எல்லாம் எப்படிக் கிடைத்தன? அனைவரிடத்தும் அன்புற்று அமர்ந்து வாழ்ந்த வழக்கத்தினாலன்றோ கிடைத்தன! நல்லவருக்கு நாலா பக்கத்திலும் உதவி கிடைக்குமே!

‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு’ ‘அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு’

குற்றம் செய்த குழந்தைகளைப் பெற்றோர் தண்டிக் கின்றனர்; குற்றம் செய்த மாணவர்களைப் பள்ளிக் கூடத்தினர் தண்டிக்கின்றனர்; குற்றவாளிகளை அரசியலார் தண்டிக்கின்றனர்; தண்டனையாகிய மறச்செயலை இவரெல்லாம் செய்வதற்குக் காரணம் என்ன? குற்றம் செய்தவர்கள் இனியும் அங்ஙனம் செய்து கெட்டுவிடாமல், திருத்தமுற்று நல்வாழ்வு வாழவேண்டும் என்று அவர்கள்