பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வள்ளுவர் இல்லம்

மேல் கொண்டுள்ள அன்பன்றோ காரணம்! குற்றவாளி களால் பிற குடிமக்களுக்கும் தீங்கு நிகழக்கூடாது, என்று பிறமக்களிடத்தும் கொண்டுள்ள அன்பும் காரணமாகிற தன்றோ! எனவே அறம் செய்வதற்கு மட்டுமன்று - மறம் செய்வதற்கும் அன்பே காரணம் என்பது புலப்படும். ஆனால் இங்கு மறம் என்பதற்கு - சில தீயோர் தன்னலங் கருதிப் பிறரை அடித்து வதைத்துப் பறித்துத் துன்புறுத்தும் கொடுஞ்செயல் என்று பொருள் கொண்டுவிடலாகாது.

“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை’ சிலர், பிறரிடம் அன்பு இல்லாததால் அடாத காரியம் பல செய்து அல்லல் இழைக்கின்றனர். இவர்களை அறம் தண்டிக்கும். அறம் தண்டிக்கும் என்றால், இயற்கை தண்டிக் கும், நீதி தண்டிக்கும், சட்டதிட்டம் தண்டிக்கும் என்பது பொருளாம். அன்பின்றி, அடாதனவற்றை அஞ்சாது செய்து வருபவன், ஒரு காலத்தில் மக்கள் குலத்தாலாவது, அரசியலாராலாவது தண்டனையைப் பெற்றே தீர்கிறான் அன்றோ? இஃது உலக இயற்கை. இத்தண்டனை ஒர வஞ்சனையாக அவனுக்காக மட்டும் ஏற்பட்டதன்று. இங்கோர் எடுத்துக்காட்டை நோக்குவோம்: நடுப்பகல்; ஞாயிறு (சூரியன்) காய்ந்துகொண்டிருக்கிறது. நடுத் தெருவில் பல மனிதர் செல்லுகின்றனர்; வெய்யிலைத் தாங்கிக் கொள்கின்றனர்; பறவை விலங்குகள் நடமாடு கின்றன. வெய்யிலைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால், எலும்பில்லாத எறும்பு, புழு முதலியன சென்றால் செத்துவிடுகின்றன; வெய்யிலைத் தாங்க முடியவில்லை.