பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவர் இல்லம்

இருக்கிறது. அதன்மேல் வற்றிய மரம் நிற்கிறது. ஆனால் தழைப்பதற்கு இடையே தண்ணீர் இல்லையே! கட்டாந் தரையிலன்றோ நிற்கிறது வற்றிய மரம்! என் செய்வது! வன்பால் போல் இளகாத மனத்தை உடைய உடம்பு இருக்கிறது. வான்பாலில் மரம் நிற்பது போல், அவ் வுடம்பில் உயிர் நிற்கிறது. ஆனால் மரம் தழைப்பது போல உயிர் வாழ்வு பெறுவதற்குத் தண்ணீராகிய அன்பு இல்லையே - என் செய்வது!

கண்ணால் நேரே காணக் கூடிய தலை, கை. கால் முதலிய உறுப்புக்களை மட்டும் உடையவனுக்கு மனிதன் என்னும் பெயர் பொருந்தாது. மரப் பொம்மை - மண் பொம்மைகளுக்கும்தான் அவ்வுறுப்புக்கள் உள்ளன. அவற்றால் என்ன பயன்? எனவே, மனத்தால் அன்பு, அருள், கண்ணோட்டம் என்று உய்த்துணரக் கூடிய உள்ஸ்ரீப்புக்களும் உடையவனே உண்மையான மனிதனாவான், என்பது ஒருதலை. எனவே அன்பென்னும் அகத்துறுப்பு இல்லாத மனிதன் தனக்கும் பிறர்க்கும் ஒருங்கே பயன்படமாட்டான், என்பது உறுதியாகுமே! ஆம், உள்ளே அன்பில்லாமல் கை, கால் முதலியன கொண்டு எவ்வாறு இல்வாழ்க்கை நடத்த முடியும்? எவ்வாறு விருந்தோம்ப முடியும்:

ஓர் இடத்தில் ஓர் அரக்கன் இருந்தான். அவன் ஒரு கட்டிளங்கன்னி - அரசகுமாரியைக் காதலித்தான். தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து விட்டான். தன் விலங்குணர்ச்சிக்கு இரையாக்கப் பார்த்தான். ஆனால் அவள் இசையவில்லை. அங்கு ஒரு கட்டிளங்காளை -