பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 59

இந்த இயற்கையமைப்பு நிலையை ஒட்டி நோக்கினும், இல்லற வாழ்க்கை என்பது, பிறர் நலத்தை அடிப்படை யாகக் கொண்டது என்பது நன்கு புலனாகும்.

விருந்தினரை வெளியே விட்டுத் தான் மட்டும்

உண்டால், அது தன்னை உண்டவனுக்குச் சாவையே உண்டாக்காத நன் மருந்தாகும் என்று சொன்னாலும்கூட அப்படி உண்டு உயிர் வாழத் தேவையில்லை. அவ்விதம் பிறர்க்கு உதவாமல் உயிர் வாழ்வதனால் உலகத்திற்கு என்ன நன்மை? அதனினும் பிறர்க்கு உதவி உதவி இறந்து விடுதலே நன்றன்றோ ஒரு விளக்கு ஒருவருக்கும் உதவாமல் உருப்படியாகப் பெட்டியில் வைக்கப் பட்டிருப்பதைக் காட்டிலும், பலர்க்கும் பல நாள் பலவிடங் களில் வெளிச்சம் தந்து, பின்பு ஒருநாள் உடைந்து விட்டாலும் தவறொன்றும் இல்லையன்றோ?

‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்பது குறள். எனவே, என்றைக்கும் இறப்பை உண்டாக்காத ஒரு நன்மருந்தை நாம் உண்பதாக இருந்தாலுங்கூட, விருந்தினரை வெளியே விட்டு உண்ணவே கூடாது.

‘மருந்தே யாயினும் விருந்தோ டுண்” என்பது ஒளவையின் அருள்மொழி யன்றோ? அவ்வளவு கூறுவானேன்? உணவைக் கண்ட ஒரு காக்கை, மற்றைய காக்கைகளை வற்புறுத்தி வரவழைத்து உண்ணுகின்றதைக் காண்கின்ற நாம், தாமாகவே தேடிவந்துள்ள விருந்தினரை வெளியே விட்டு உண்ணுவது ஒழுங்காகாதன்றோ?