பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 61

நாம் விடாமல், ‘இன்றைக்கு நீங்கள் செல்லவே கூடாது. உங்களுக்காகவா நாங்கள் நிலத்தில் நெல்விதைத்துப் பயிரிட்டு அறுத்துக் கொண்டு வந்து சமைக்கப் போகிறோம். ஏதோ எங்களுக்கு உள்ளதில் தாங்களும் சிறிது உண்டு செல்லவேண்டும், என்று தடுத்து உண்ணச் செய்கிறோம். இதுதான் முதல் உரையின் கருத்து.

எனவே, வந்த விருந்தினரை உண்ணச் செய்து விட்டு, மிகுதியிருந்தால் தான் உண்ணும் மனப்பான்மை யுடைய ஒருவன், விருந்தினர்க்காகச் சேர்த்து நிலத்தில் விதை விதைக்க வேண்டுமா? வேண்டாவே! எனவே, இத்தகையவன் விருந்தினர் வந்துவிட்டால் என்ன செய்வ தென்று விழிக்கவும் வேண்டியதில்லை; மறையவும் வேண்டியதில்லை; அல்லது ஒடியாடிப் புதிதாகத் தயாரித்துத் தொல்லையடையவும் வேண்டியதில்லை என்பது பெறப்படும்; ஏனென்றால் அவன் சமயம் நேரிடின் தனக்குள்ளதையே அவர்க்கு அளித்து விடுவான் அல்லவா?

இரண்டாவது உரை வருமாறு:

தன்னலம் பாராது பிறர் நலம் பேணுபவன் - தன் பசியையும் பாராது பிறர் பசியைப் போக்குபவன் - தனக்கு வைத்திருக்கும் உணவைப் பிறர்க்கு அளித்துவிடும் பெரிய உள்ளம் படைத்தவன், வீட்டில் ஒன்றும் இல்லாதபோது விருந்தினர் வந்து விட்டால், விதைப்பதற்கென்று வைத் திருக்கும் விதை நெல்லை நிலத்தில் கொண்டுபோய் விதைக்கவும் விரும்புவானா? விரும்பமாட்டான். அதனைக் குத்தி அரிசியாக்கிச் சமைத்து விருந்தினர்க்குப் படைக்கவே