பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வள்ளுவர் இல்லம்

நாடோறும் வரும் விருந்தினர்க்கு உணவு அளித்துக் கொண்டே யிருப்பவனுடைய வாழ்க்கை பாழ்படாது என்று வள்ளுவர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறதே என்று எண்ணலாம் சிலர். அவர்கள் தம் எண்ணத்திற்குக் காரணமாக, எல்லார்க்கும் இட்டுக் கொண்டேயிருந்தால் செல்வம் குறைய வாழ்க்கை பாழ்பட்டே தீரும் என்று மொழியலாம். உண்மை அப்படியன்று.

கடன்காரனுக்கு அஞ்சித் தகப்பன் குதிர்க்குள்ளே புகுந்து கொண்டிருக்க, மைந்தன் வந்தவனிடம், “எங்கப்பா குதிருக்குள் இல்லை’ என்று சொன்னதைப்போல், விருந்தோம்புவதால் குடும்ப வளர்ச்சி தடைப்படும் என்ற உண்மையை அறிந்தும், அதனை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திருவள்ளுவர் முன்னெச்சரிக்கையாக இக்குறளைப் பாடிக்கொண்டார் என்று சொல்வது பொருந்தாது. அப்படியெனின் இக்குறளைப் பாடியதின் நோக்கம், விருந்தோம்பினால் குடும்பம் நொடித்துப் போகும் என்று சொல்பவரை மறுப்பதேயாகும். ஆசிரியர் கூற்று எங்ஙனம் பொருந்தும் என்று சற்று ஆராய்வோம்:

விருந்தோம்புவேன் என்று தொடங்கித் தம்மிடமுள்ள பொருள்களை எல்லாம் வருபவரிடம் வாரி வாரி இறைத்துக் கொண்டேயிருந்தால்தான் குடும்ப வளர்ச்சி தடைப்படும். வள்ளுவர் அப்படிச் செய்யச் சொல்லவில்லையே! திங்கள் ஒன்றுக்கு நூறு (ருபா) வெண் பொற்காசு ஈட்டும் சிலருடைய வீட்டின் எதிரில் இருந்து கொண்டு நோக்குவோமாயின், அவர் வீட்டில் காலையில் ஓர்