பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வள்ளுவர் இல்லம்

பிறர்க்கு உதவ மனமின்றி, ஆறிடு மேடு மடு போலவும் சகடக்கால் போலவும் நிலையற்றதான செல்வத்தை நம்பிச் சிலர் பாதுகாத்து வந்தாலும், அச் செல்வம் அவர்களையும் ஏய்த்து, தனக்குள்ள இயற்கைப் படி, அவர்களிடம்சொல்லிக் கொள்ளாமலேயே சென்றாலும் சென்றுவிடலாம் அல்லவா? அப்போது இக்கருமிகள் தலை மேல் கைவைத்து வருந்த வேண்டியவர்தாமே! எனவே, நிலையற்ற செல்வம் நிலைத்துள்ளபோதே பலர்க்கும் பயன் படுத்த வேண்டும். அதுதான் அறிவுடைமை.

ஒருவர் எவ்வளவு பெருஞ்செல்வம் பெற்றிருப்பினும் பிறர்க்கு உதவாமற் போவாரேயானால் அவர் ஏழையாகக் கருதப்படுவார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்; அவர் அறிவிலி என்பதையும் மறக்காமல் நினைவு கூருங்கள். ஏன்? எப்படி?

ஒன்றும் அற்ற ஏழை பிறர்க்கு உதவ முடியாது. எல்லாம்பெற்ற செல்வரும் பிறர்க்கு உதவவில்லையென்றால் ஏழைக்கும் செல்வருக்கும் வேறுபாடென்ன? ஒன்றுமற்ற ஏழையுங்கூட சில சமயங்களில் தன்னால் இயன்ற அளவு முயன்று பிறர்க்கு உதவுகிறபோது, எல்லாம் பெற்ற செல்வர் பிறர்க்கு உதவவில்லை யென்றால், அவரை ஏழை யுள்ளும் பெரிய ஏழையாகக் கூறுவதில் என்ன பிழை: மற்றும் ‘ஏழைகள்தாம் பிறர்க்கு உதவ முடியவில்லை. நாம் செல்வராயிற்றே! நாமும் உதவாவிட்டால் ஏழைக்கும் நமக்கும் என்ன வேற்றுமை நிலையாத செல்வம் நிலைத்துள்ளபோதே நாம் பலர்க்கும் பயன்படாவிட்டால், காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ளாத மடையனுக்கல்லவா