பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 69

நிகராவோம்? காற்று நின்றுவிட்டால் பின் என்ன செய்ய வியலும்?” என்றெல்லாம் ஆராய்ந்து எண்ணிப் பார்க்காத கருமிச் செல்வர்களை அறிவிலிகள் என்று அறைவதில்தான் தவறு யாது?

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.’ ‘உடைமையுள் இன்மை விருந்தோம்ப லோம்பா

மடமை மடவார்கண் உண்டு;

மிகமிக மென்மை உடையதான அனிச்சம் பூ கூட, பார்த்த அளவிலோ, அல்லது நெருங்கிய அளவிலோ வாடாது; முக்கால் மோந்த பிறகுதான் வாடும். ஆனால் நல்ல விருந்தினரோ அத்தகையினரல்லர், எட்டி வரும் போதே, வீட்டுக்காரரின் முகக்குறி வெறுப்பினால் சிறிது வேறுபட்டிருப்பதாக அறிந்து கொண்டாலும் அங்கேயே - அப்போதே மனம் சோர்வர். ஆதலின், வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர்வந்தக்கால், அவரை வரவேற்கத் தங்கட்கு வசதியில்லாவிடினும், வசதியிருந்தும் அங்ஙனஞ் செய்ய மனமில்லாது போயினும், அவரை வெறுப்பாக நோக்கி விரட்டாமல், இனிமையாக நோக்க இன்சொற் பேசித் தம் இயலாமையை அவர்க்குக்குறிப்பான் அறிவித்தனுப்புவதே அறிவுடைமையும் நாகரிகமும் ஆகும்.

வசதி இருப்பின் எல்லா நன்மையையும் இனிமை யாகச் செய்தனுப்பலே சிறந்தது.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து'