பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 73

கலந்த இன்சொல் என்னும் அணியை யாரும் எங்கும் என்றும் எவ்விடையூறுமின்றி எளிதாய்ப் பெற்றுத் திகழ முடியுமன்றோ?

“துன்புறு உம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறு உம் இன்சொ லவர்க்கு.” ‘பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி அல்ல மற்றுப் பிற.” ஒருவன் பிறரிடம் இனிமையாகப் பேசிப் பழகப் பழகிக் கொண்டு வருவானேயானால், அவனிடம் இவ்வளவு நாளாய் இருந்துவரும் தீக்குணங்கள் எல்லாம் அகலத் தொடங்கும்; இனியும் அவை தோன்றுவதற்கு இடமிராது; மேன்மேலும் நல்லெண்ணங்களும் நற்சொற்களும் நற் செயல்களுமே வளர்ந்து அவனை மாசற்ற - மாணிக்க மாக்கும். எப்படி? மக்கள் மன்றத்தில் (சமுதாயத்தில்) இனிமையாகவே பழகுவேன் என்று ஒருவன் சூள் (சபதம்) செய்து கொள்வானேயானால் அவனிடம் அறமின்றி மறம் தோன்றுவதற்கு வழி எங்கே?

பிறர்க்குப் பயனுண்டாகும்படி இனிமையாகப் பேசுபவ ரிடம், பிறரும் நயமுடன் (இனிமையாக) நடந்து, நன்றி யறிதலாக நன்மை பல செய்வர். நாம் கடுமையாயிருந்தால் பிறரும் கடுமையாகவும், நாம் இனிமையாயிருந்தால் பிறரும் இனிமையாகவும் பழகுவது உலக இயற்கைதானே! எட்டி விதைத்தவர் எட்டிக்கனியைத்தான் பெறமுடியும் கரும்பு நட்டவன் கருப்பங்கட்டியைப் பெறமுடியும்!

இன்சொல் பேசியவர் இருக்கும்போதும் - இறந்த பின்னும் நன்மையும் புகழும் பாராட்டும் பெறுவர். அவ்