பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வள்ளுவர் இல்லம்

‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன் தெரிவார்.’

‘உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.’

குற்றமற்ற நல்லோர் நம்மிடம் காட்டிய அன்புக் கண்ணோட்டத்தை என்றும் மறத்தலாகாது. அது போலவே, துன்ப நேரத்தில் உதவியவர் தொடர்பையும் துறத்தலாகாது. அன்னாரது உதவியின் அருமையினை ஏழேழு தலைமுறை களிலும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.’ “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.” உதவி செய்த குடும்பத்தை உதவி பெற்ற நல்ல குடும்பம் தலைமுறை தலைமுறையாக மதித்துப் பாராட்டியும் அன்பு பூண்டும் பதில் உதவி செய்து வருவதும் வழக்கந் தானே! தமக்குத் தீங்கு செய்த ஒருவனை நோக்கி, தீங்கு செய்யப்பட்டவர், “இவன் ஏழேழு (நாற்பத்தொன்பது) தலைமுறைக்கும் உருப்படுவானா?” என்று வசைபாடும் உலக வழக்கையொட்டி, ஈண்டு ‘எழுமை எழு’ என்பதற்கு ஏழேழு (49) என்று பொருள் உரைக்கப்பட்டது. ஒருவன் ஏழேழு தலைமுறைகட்கும் உருப்பட மாட்டான் என்றால், கெட்டவனான அவன் வழித் தோன்றும் நாற்பத்தொன்பது தலைமுறையினரும் இழிக்கப்படுவர் என்பது தானே பொருள்! எனவே இது, ஒன்றைச் சிறிது மிகைப்படுத்திக் கூறும் “உயர்வு நவிற்சியணி'யேயாகும். இக்குறளையும்